• Nov 10 2024

அமைச்சருக்கு ஆபத்து என்றால் உன்னுடைய தலை சிதறி விடும்- லட்சுமியை குறி வைக்கும் தீவிரவாதிகள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி அமைச்சருக்கு ஆபரேஷனை தொடங்குகிறார். அவர் அந்த பக்கம் ஆப்ரேஷன் தொடங்கியதும் தீவிரவாதிகள் ஏற்கனவே எச்சரித்தபடி லட்சுமி தலையில் துப்பாக்கியை வைக்கின்றனர். அமைச்சருக்கு ஏதாவது ஆபத்து என்றால் முதலில் உன்னுடைய தலை சிதறிவிடும் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.


இதனைத் தொடர்ந்து பாரதிக்கு உதவியாக சென்ற நர்சுகள் பதற்றத்தில் எல்லா விஷயத்தையும் தவறுதலாக செய்ய பாரதி கோபப்பட்டு எல்லோரையும் வெளியே அனுப்பி கண்ணம்மாவை மட்டும் உள்ளே அனுப்புமாறு கூறுகிறார். பிறகு தீவிரவாதிகள் கண்ணம்மாவை ஆப்ரேஷன் தியேட்டருக்கு அனுப்புகின்றனர். சொல்லுங்க டாக்டர் என கேட்க நான் சொல்லும் வேலைகளை மட்டும் செய்தால் போதும் என பாரதி கூறுகிறார்.


பிறகு தீவிரவாதிகள் போலீசிடம் டீல் பேசுகின்றனர். உடனடியாக செல்வத்தை ஜெயிலில் இருந்து வெளியே அனுப்ப சொல்கின்றனர். அதற்கு பதிலாக அமைச்சரை வெளியிட போலீஸ் தரப்பு கேட்க அதற்கு தீவிரவாதிகள் மறுப்பு தெரிவிக்கின்றனர். பிறகு 10 பேரை வெளிய அனுப்ப தீவிரவாதிகளிடம் போலீசார் கேட்க அதற்கு ஓகே சொல்கின்றனர்.இந்தப் பக்கம் ஹேமா ஹாஸ்பிடலுக்கு செல்லும் சாப்பாட்டு வண்டியில் ஏறி பாரதியிடம் சென்று சேர முடிவெடுக்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement