இந்திய சினிமாவில் கவர்ச்சிக்குப் பேர் போன நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை தர்ஷா குப்தா. கோவையைச் சேர்ந்த மாடல் அழகியான இவர் நடிப்பின் மீது கொண்ட மிகுந்த ஆர்வம் காரணமாக சின்னத்திரை சீரியல்களில் கால்பதித்து நடித்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து பின்னர் விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி' யின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டபின் மிகவும் பேமஸ் ஆனார். இந்நிகழ்ச்சியே இவருக்கு ஏராளமான ரசிகர்களையும் பெற்றுக் கொடுத்திருந்தது.
பல மக்கள் மனங்களை வேற தர்ஷா குப்தாவிற்கு சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வகையில் இவருக்கு ஹீரோயின் என்ற அந்தஸ்தைக் கொடுத்து சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்த படம் 'ருத்ரதாண்டவம்'.
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் இவர் நடிகர் ரிச்சர்டு ரிஷிக்கு ஜோடியாக இணைந்து நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது 'ஓ மை கோஸ்ட்' என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்
இவ்வாறு பல படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்ற தர்ஷா குப்தா, மேலும் பட வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் வண்ணம் விதவிதமாக போட்டோஷூட்டுக்களை நடத்தியும் வருகிறார். அதிலும் இவர் நடத்தும் கவர்ச்சி போட்டோஷூட்டுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இவருக்கு உண்டு.
அந்த வகையில் தர்ஷா குப்தா தற்போது நடத்தியுள்ள வித்தியாசமான போட்டோஷூட்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, சர்ச்சையிலும் சிக்கி உள்ளது. அதாவது இவர் தண்டவாளத்தின் நடுவே நின்று உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்தபடி போட்டோஷூட் நடத்தி இருக்கின்றார்.
இவரின் இந்தப் புகைப்படங்களிற்கு லைக்குகள் குவிந்து வந்தாலும், ஒரு சிலர் இதுபோன்று தண்டவாளத்தில் நின்று போட்டோஷூட் நடத்தி மற்றவர்களுக்கு தவறான ஒரு முன்னுதாரணமாக இருக்காதீர்கள் என விமர்சித்தும் வருகின்றனர்.
Listen News!