• Nov 14 2024

அச்சு அசல் சீதையை போல மாறிய தர்ஷா குப்தா... ராமனுக்காக வெயிற்ரிங்கா..? கமெண்டுகளைத் தெறிக்க விடும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகைகளைப் பொறுத்தவரையில் பட வாய்ப்பை முதலில் கைப்பற்றுவதற்கு முன்பாகவே கிளாமரை காட்டி இளசுகளை தன் கண்ட்ரோலில் வைத்துக் கொண்டுதான் சினிமா உலகிலேயே குதிக்கின்றனர். இந்த லிஸ்டில் உள்ள ஒருவர் தான் நடிகை தர்ஷா குப்தா. இவர் மாடல் மற்றும் நடிகையாக வலம் வருகிறார். அத்தோடு சீரியலில் தான் முதலில் அறிமுகமானார். 



அதிலும் குறிப்பாக ஜீ தமிழில் 'முள்ளும் மலரும்' என்ற சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார். அதன் பின்னர் விஜய் டீவியில் 'அவளும் நானும்' தொடரில் மௌனிகா தேவி மற்றும் அம்ருத் கலாம் ஆகியோருடன் இணைந்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜய் டீவியில் 'செந்தூரப்பூவே' தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


அத்தோடு விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் சீசன் 2 வில் பங்கேற்று  பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். எனினும் இவர் நீண்டகாலமாக சினிமா வாய்ப்புகளையே குறிவைத்து வருகிறார். அதற்காக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பல இளசுகளின் மனங்களை கொள்ளை கொண்டார்.



அதன் பின்பும் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு எதிர்பார்க்காத அளவிற்கு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார். ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி உடன் கைகோர்த்து 'ருத்ரதாண்டவம்' என்ற திரைப்படத்தில் நடித்தார்.



அதனை தொடர்ந்து சன்னி லியோனுடன் இணைந்து தற்பொழுது  'ஓ மை கோஸ்ட்' என்ற படத்திலும் நடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். சினிமா உலகில் ஒரு பக்கம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுகிறார்.



அந்தவகையில் தற்போதும் "ராமன் தேடிய சீதை" எனக் குறிப்பிட்டு சீதை போன்று வேடமணிந்து அப்புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கின்றார். அதில் அவர் பார்ப்பதற்கு அச்சு அசலாக சீதையை போலவே இருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "ராமனுக்காக வெயிற்ரிங்கா" எனக் கேட்டு தமது கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement