• Nov 17 2024

இன்னும் 7 நாட்களில் மகள்... பாடலாசிரியர் கபிலன் போட்ட ட்வீட் ..ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் எழுதி வருகின்றார்.

2001ல் விக்ரம் நடிப்பில் வெளியான, ‘தில்’ படத்தில் இடம்பெற்ற ‘உன் சமையல் அறையில்’ என்ற பாடல் மூலம் பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்  தான் கபிலன்.

இதனைத் தொடர்ந்து, விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், தனுஷ், சூர்யா, விஷால், சிம்பு என பல முக்கிய நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ளார்.அவரது ஏராளமான பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் சூப்பர்ஹிட்டாகி உள்ளன. கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் நடித்தும் இருக்கிறார் கபிலன்.

அத்தோடு கபிலன் சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். மேலும் அவரது மகள் தூரிகை அண்மையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இளம் வயதில் தூரிகை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகினரையும், ரசிகர்களையும்  பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனினும் இந்த நிலையில் தனது மகளை நினைத்து பாடலாசிரியர் கபிலன் அவர்கள் பார் மகளே பார் படத்திற்காக கண்ணதாசன் எழுதிய அவள் பறந்து போனாளே பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


 உருக்கமாக அந்த பாடலை பதிவிட்டுள்ள கபிலனுக்கு ரசிகர்கள் பலர் ஆறுதலையும் அனுதாபங்களையும் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement