விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது ஏற்கெனவே 6சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இவ்வாறாக பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் அக்டோபர் 1-ஆம் தேதி ஆரம்பமாகிறது.
இந்த சீசனில் எந்தெந்த பிரபலங்கள் எல்லாம் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் எகிறிய வண்ணம் தான் இருக்கின்றது. அந்தவகையில் நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவும் பிக்பாஸ் வீட்டில் நுழைய இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் சமீபத்தில் வனிதா கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து அவரிடமே கேட்கப்பட்டது.
அதாவது பிக்பாஸிற்கு உங்க பொண்ணு போறதாக ஒரு தகவல் பரவிட்டு வருது எனக் கூற வனிதாவும் ஆச்சரியத்துடன் அப்படியா எனக் கேட்கின்றார். மேலும் அதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க, அது உண்மையா எனக் கேட்டிருந்தனர். அதற்கு வனிதா பதிலளிக்கையில் "அக்டோபர் 1-ஆம் தேதி என்னோட ரிவியூ ஆரம்பிக்கும், Biggboss VS Vanitha அதைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க" எனத் தெரிவித்துள்ளார்.
எனவே வனிதா மகள் ஜோவிகா கலந்து கொள்வாரா இல்லையா என்பதனை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!