• Sep 20 2024

அப்பாவைப் போல பொண்ணும் வந்தாச்சு- சித்தியுடன் சேர்ந்து ரீல் செய்யும் சாண்டி மாஸ்டரின் மகள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் நடன இயக்குநராக இருந்து பிரபல்யமானவர் தான் சாண்டி மாஸ்டர். இவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிய மானாட மயிலான என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமானவர். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியிலும் பல நிகழ்ச்சிகளில் நடன இயக்குநராகவும், நடுவராகவும் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து சூப்பர் ஹிட் ரியாலிட்ரி ஷோவான பிக்பாஸ் சீசன் 3 இலும் போட்டியாளராகப் பங்கு கொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்று பிரபல்யமானார். இதில் கிடைத்த புகழால் ஏராளமான படங்களில் நடன இயக்குநராக பணியாற்றி வருகின்றார்.

சமீபத்தில் கூட கமல் நடிப்பில் வெளியாகி பெரிய லெவெலில் ஹிட் அடித்துள்ள விக்ரம் படத்தில் நடன இயக்குநராக இருந்தார் சாண்டி. இப்படத்தில் இடம் பெற்ற பத்தல பத்தல பாடல் வேற லெவெலில் ஹிட் அடித்தது. இது தவிர குடும்பத்துடனும் நேரம் செலவளித்து வருவார்.

சாண்டி அவரது மகளுடன் சேர்ந்து அவர் செய்யும் குறும்பு வீடியோக்கள் பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். மகள் சூசனாவை செல்லமாக லாலா என்றே அழைப்பார் சாண்டி. லாலா செய்யும் குறும்புகளை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார் சாண்டி. தற்போது தனது சித்தியுடன் சிந்தியாவுடன் சேர்ந்து லாலா ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளதுள்ளார். செம்ம Cute ஆக இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement