• Sep 20 2024

அழகில் அம்மாவையே மிஞ்சிய பொண்ணுங்க... அடடே ரம்பாவின் மகள்களா இவங்க... தேவதை போல ஜொலிக்கிறாங்களே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் 90 காலப்பகுதியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து ரசிகர்கள் பலரின் மனதை கொள்ளை கொண்டவரே நடிகை ரம்பா. சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த 'உள்ளத்தை அள்ளித்தா' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இவர், அதனைத் தொடர்ந்து ரஜினி, கார்த்திக், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கின்றார். 


மேலும் ரசிகர்களால் 'தொடை அழகி' என சிறப்பாக அழைக்கப்பட்ட ரம்பா, கவர்ச்சியாக நடித்து இளைஞர்களை கவர்ந்திழுப்பதில் வல்லவராகவும் இருந்திருக்கின்றார். அத்தோடு தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார். 


இவ்வாறாக நடிப்பில் பட்டையை கிளப்பி வந்த இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்திருக்கின்றார். தற்போது இந்த தம்பதிக்கு லான்யா, சாஷா என்ற இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.


திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து வருகின்ற ரம்பா சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கின்றார். அதில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் தற்போதும் தனது மகள்களின் பழைய புகைப்படங்களை பகிர்ந்திருக்கின்றார். 


அதில் அவர்கள் இருவரும் ரம்பாவை மிஞ்சும் அளவிற்கு ரொம்பவே அழகாக இருக்கின்றார்கள்.

Advertisement

Advertisement