• Nov 14 2024

மாடல் உடையில் கோலிவூட் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் டிடி - லேட்டஸ் கிளிக்ஸ்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

 காபி வித் டிடி நிகழ்ச்சி மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் வளைத்துப் போட்டவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சினிமா பிரபலங்களை, அவர்களது கேரியர் மற்றும் சொந்த வாழ்க்கையை குறித்து பேட்டி எடுப்பதில் திறமையானவர்.

சின்னத்திரையில் பிரபலமானதை அடுத்து வெள்ளித்திரையிலும் கணிசமான படங்களில் நடித்துள்ளார். டிடிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து அவரால் நீண்ட நேரம் நிற்கமுடியாததால் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்து வருகிறார். 

ஒரு சில, தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். அண்மையில் தனுஷ் நடித்த வாத்தி இசைவெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் -ஆக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது கொலிவூட் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் விதமாக கருப்பு நிற மாடல் உடையில் அழகில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அவை தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement