ராம் பாலா இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தில்லுக்கு துட்டு'. இப்படத்தின் முதல்பாகம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தையும் படக்குழுவினர் எடுத்தனர்.
முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தையும் ராம்பாலா இயக்க சந்தானம் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் கடந்த 2019-ம் ஆண்டு திரையரங்கில் வெளியான நிலையில் முதல் பாகத்தை விட அதிக வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. இருப்பினும் சந்தானம் நடிப்பில் கடைசியாக ரிலீஸ் ஆன ஹிட் படம் என்றால் அது இதுதான்.
இப்படத்திற்குப் பின்னர் சந்தானம் நடித்த அனைத்து படங்களுமே படு தோல்வியை சந்தித்தன. இதனால் மீண்டும் ஹிட் படத்தை கொடுக்கும் நோக்கில் தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாம் பாகத்தை தற்போது கையில் எடுத்துள்ளார் சந்தானம். இதற்கு 'டிடி ரிட்டர்ன்ஸ்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் எஸ்.பிரேம் குமார் என்பவர் தான் இயக்குகிறார். இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக சுரபி நடிக்கின்றார். இந்நிலையில் தற்போது தமிழ் புத்தாண்டு தினமான இன்று டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
Listen News!