• Sep 20 2024

21 வயது இளைஞரின் இடுப்பில் ஏறி உட்கார்ந்து இருக்கும் டிடி... என்னம்மா இப்படிப் பண்ணுறீங்களே... அது யாராக இருக்கும்...?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் சேனல்களில் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமான தொலைக்காட்சி என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான்.

இதில் காலத்திற்கு காலம் தொகுப்பாளர்கள், நடிகர், நடிகைகைகள், பாடகிகள், நடன அமைப்பாளர்கள் எனப் பல கலைஞர்களும் தோன்றிய வண்ணம் தான் இருக்கின்றார்கள். 

இவ்வாறான பிரபலங்கள் பலரையும் உருவாக்கி வருகின்ற இந்தத் தொலைக்காட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.


இவர் ஏராளமான நிகழ்ச்சிகளை விஜய் டீவியில் தொகுத்து வழங்கி இருந்தாலும், 'காஃபி வித் டிடி' என்ற நிகழ்ச்சி தான் மக்கள் மத்தியில் இவருக்கான ஒரு அடையாளத்தை பெற்று தந்தது.

அதுமட்டுமல்லாது தற்போது வழக்கம் போல் இல்லாமல் முக்கியமான ஒரு சில நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார் டிடி. அத்தோடு சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையில் கால் பதித்து இருக்கின்றார். 


படங்கள், நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது சமூக வலைத்தளப் பக்கங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, அதில் அடிக்கடி வீடியோ அல்லது புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்காக வைத்துள்ளார்.

அந்த வகையில் தனது அக்கா மகனின் புகைப்படங்களை வீடியோ தொகுப்பாகத் தொகுத்து பதிவு செய்திருந்தார் டிடி. இதில், சிறு வயதில் அக்கா மகனை தூக்கி வைத்திருக்கிறார் டிடி. அதை அப்படியே ரீ கிரியேட் செய்யும் விதமாக தற்போது தனது அக்கா மகனின் இடையில் ஏறி அமர்ந்திருக்கிறார் டிடி. 


அதனை அப்படியே புகைப்படமாக எடுத்திருக்கின்றார்கள். இந்தக் க்யூட்டானா புகைப்படமானது தற்போது அதிகளவில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement