இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அனுஇமானுவேல் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ஜப்பான்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகவும் கோலாகலமாக நடந்தது.
இந்த விழாவிற்கு சத்யராஜ், ஆர்யா, விஷால், ஜெயம்ரவி, தமன்னா, போன்ற திரையுலக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.அத்தோடு சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஜப்பான் கார்த்தியின் 25வது படம் என்பதால் சூர்யா தான் இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார்.
இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. நேற்று நடந்த விழாவில் எந்தவொரு கலவரமும் இல்லாமல் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் நிகழ்ச்சியில் ஒரு சிறிய தவறு நடந்து விட்டதாகவும் ஒரு செய்தி வெளியானது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது பிரபல தொகுப்பாளினி டிடியும் மா.கா.பா.ஆனந்தும் தான்.
எப்பவுமே ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தவரை நிகழ்ச்சியின் கடைசியில்தான் பேச அழைப்பார்கள். ஆனால் டிடி நிகழ்ச்சியின் இடையிலேயே சூர்யாவை பேச அழைத்திருக்கிறார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் சூர்யாவின் ரசிகர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.இதனால் சூர்யா பேசி முடித்தவுடன் பாதி ரசிகர்கள் கிளம்பிவிட்டார்களாம். இதில் கார்த்தி கொஞ்சம் அப்செட்டில் இருந்ததாகவும் தெரிகிறது. கார்த்தி மேடைக்கு பேச வரும் போது ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள்தான் இருந்திருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியது.
Listen News!