• Sep 20 2024

முக்கிய சீரியலில் இருந்து திடீரென விலகிய டிடியின் அக்கா பிரியதர்ஷினி- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் தான் எதிர்நீச்சல். மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன் தம்பி வாழுகிறார்கள்.இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்களை எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக கருதி வருகிறார்கள்.

இந்த ஆண் ஆதிக்கத்திலிருந்து எப்போது விடுவிக்கப்பட்டு சுயமரியாதையோடு வாழ்வார்கள் என்பதை இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்து வருபவர் தான்  டிடியின் அக்கா பிரியதர்ஷினி.


இந்த சீரியலபை் போல விஜய் தொலைக்காட்சியிலும் நம்ம வீட்டுப் பிள்ளை தொடரில் நடித்து வந்தார், தற்போது இந்த சீரியலில் இருந்து அவர் வெளியேறிவிட்டார்.ஆனால் அவர் எதிர்நீச்சல் தொடரில் இருந்து விலகிவிட்டார் என தவறான தகவல் வெளியாக ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.

அவருக்கு பதிலாக சீரியல் நடிகை பானுமதி மாற்றப்பட்டு இருக்கிறார். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பலர் இந்த மாற்றத்தை ஏற்க மறுத்துள்ளனர்.மேலும் இவர் இந்த சீரியலில் இருந்து ஏன் விலகினார் என்ற காரணம் சரியாகத் தெரியவில்லை என்பதும் முக்கியமாகும்.





Advertisement

Advertisement