• Nov 14 2024

2023 ஆம் ஆண்டில் எனது கணவருடன் முதற்பதிவு- நஸ்ரியா நசீம் வெளியிட்ட ரொமாண்டிக்கான போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில்  2013 ஆம் ஆண்டு வெளியான 'நேரம்' படம் மூலம் அறிமுகமாகியவர் தான் நஸ்ரியா நசீம்.குழந்தை நட்சத்திரமாக நடித்து ஏற்கனவே கேரளா முழுவதும் அறியப்பட்ட இவர் தமிழில்  ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடிபேசவும், திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.


நஸ்ரியாவுக்கு என்றே தமிழ் சினிமாவில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் பத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்குப் பின்னர் சினிமாக்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, சில ஆண்டுகளுக்கு முன் மலையாள படங்களில் நடிக்க துவங்கினார். 


இதில் பகத் பாசில் கூட நடித்த ட்ரான்ஸ் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. சமீபத்தில் இந்த படம் நிலை மறந்தவன் என்ற பெயரில் தமிழில் வெளி வந்தது. அண்மையில் நானியுடன் அடடே சுந்தரா படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா, அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், குடும்பத்தினர், நண்பர்கள் உடன் இருக்கும் புகைப்படங்கள், கணவர் பகத்துடன் பயணம் செய்யும் புகைப்படங்களை பதிவேற்றுவார்.


இந்நிலையில் இன்று   இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை நஸ்ரியா பதிவிட்டுள்ளார். அதில் தனது கணவர் பஹத் பாசிலுடன் வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


மராகேஷ் நகரில் கணவர் பஹத் பாசிலுடன் உணவருந்தும் புகைப்படம், அங்குள்ள கலைநயம் மிக்க தெருக்களை சுற்றி பார்த்த புகைப்படங்களை நஸ்ரியா பகிர்ந்துள்ளார். "2023 ஆம் ஆண்டில் பஹத்துடன் முதல் பதிவு" என இந்த பதிவுக்கு நஸ்ரியா தலைப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement