• Sep 20 2024

பலர் முன்னிலையில் உணர்ச்சி வசப்பட்டு.. ஷாருக்கானுக்கு பப்ளிக்காக முத்தம் கொடுத்த தீபிகா படுகோன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் கிங்கானாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். இவரின் நடிப்பில் சமீபத்தில் ஷாருக்கானின் 'பதான்' திரைப்படம் வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் இப்படமானது வெளியாகி 7நாட்களைக் அடைந்து விட்ட நிலையில் 500 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது. 


இதனைத் தொடர்ந்து பதான் படத்தின் வெற்றியை பாலிவுட் நடிகர்களுக்கு பார்ட்டி வைத்து சமீபத்தில் பிரமாண்டமாகக் கொண்டாடிய ஷாருக்கான் நேற்று சக்சஸ் மீட் வைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு தனது உணர்வு பூர்வமான நன்றியைத் தெரிவித்து இருந்தார்.


அந்த விழாவில் இயக்குநர் சித்தார்த் ஆனந்த், ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பதான் படக்குழுவினர் பலரும் பங்கேற்றிருந்தனர்.


பதான் படத்தில் ஷாருக்கான் உடன் எல்லை மீறிய கவர்ச்சியில் நடித்திருந்த தீபிகா படுகோன், நேற்றைய தினம் பப்ளிக்காக சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு நடிகர் ஷாருக்கானை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்த புகைப்படங்களும் வீடியோவும் சோஷியல் மீடியாவில் தற்போது டிரெண்டாகி வருகின்றன.


Advertisement

Advertisement