இந்திய திரையுலகில் ஆகசிறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் சத்யராஜ். 1978 ல் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான ‘சட்டம் என் கையில்’ படத்தில் அறிமுகமானவர்.
எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதே கதாபாத்திரமாக திரையில் வாழக்கூடியவர் நடிகர் சத்யராஜ். அதிலும் குறிப்பாக வில்லன் கதாபாத்திரம் என்றால் சொல்லவே தேவையில்லை. அந்த அளவிற்கு வெறித்தனமாக நடிப்பார்.
இவர் நடிப்பில் வெளிவந்த அமைதிப்படை, நடிகன், கடலோர கவிதைகள் என பல படங்கள் மக்கள் மனதில் இன்றும் நீங்காமல் இடம் பிடித்துள்ளது.இவர் இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய ப்ரின்ஸ் திரைப்படத்தில நடித்திருந்தார்.
தொடர்ந்தும் பிஸியாக நடித்து வருகின்றார். இந்த நிலையில் சத்யராஜ் வீட்டில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. அதாவது அவரது அம்மாவான நாதம்பாள் வயது மூப்ப காரணமாக தனது 94 வயதில் இன்று இறந்துள்ளார்.
இதனால் படப்பிடிப்புக்கு ஐதராபாத்திற்குச் சென்ற சத்தியராஜ் கோவை விரைந்துள்ளார். அத்தோடு இவரது இறப்பிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'நண்பர் சத்யராஜ் தாயாரும் இளவல் சிபி சத்யராஜின் பாட்டியான நாதாம்பாள் காளிங்கராயர் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.''அன்னையை இழந்து வாடும் அவருக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என நடிகர் கமலஹாசன் தனது அனுதாபத்தை கூறியிருந்தார்.
Listen News!