லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார். லியோ வெளியானதும் கார்த்தியின் கைதி 2 படப்பிடிப்பை தொடங்க லோகேஷ் முடிவு செய்துவிட்டாராம். லோகேஷின் யுனிவர்ஸில் உருவாகும் கைதி 2ம் பாகத்தில் கார்த்தியுடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படமும் லோகேஷின் தரமான சம்பவமாக இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநகரம் படம் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், நான்கே படங்களில் கோலிவுட்டின் டாப் மோஸ்ட் இயக்குநராக மாஸ் காட்டி வருகிறார். மாநகரம் படத்திற்குப் பின்னர் லோகேஷ் இயக்கிய கைதி தான் அவரை உச்சத்தில் கொண்டு சேர்த்தது.
தற்போது சூர்யாவும் கைதி 2ம் பாகத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. கைதி படத்தில் கார்த்தியின் டில்லி கேரக்டர் ரசிகர்களின் ஃபேவரைட்டாக அமைந்தது. அதேபோல், விக்ரம் படத்தின் இறுதிக்காட்சியில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தார் சூர்யா. கார்த்தியின் டில்லி, சூர்யாவின் ரோலக்ஸ் இந்த கேரக்டர்களும் மோதும் படமாக தான் கைதி 2 உருவாகவுள்ளதாம். ஏற்கனவே கார்த்தி ஹீரோவாகவும் தான் வில்லன் கேரக்டரில் நடிக்க ஆசை எனவும் சூர்யா கூறியிருந்தார். அவரின் இந்த ஆசை தற்போது லோகேஷ் மூலம் உண்மையாகவிருப்பதாக சொல்லப்படுகிறது.
லியோ ரிலீஸானதுமே கைதி 2ம் பாகத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. கார்த்தி – சூர்யா இருவரும் கைதி 2 படத்தில் இணைந்தால் அது செம்ம ட்ரீட்டாக இருக்கும் ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.
Listen News!