பாலிவூட் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ஷாருகான். இவர் தற்பொழுது இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் ஜவான் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடித்து வருகின்றார்.
இப்படத்தில் ஷாருக் கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். அத்தோடு தீபிகா படுகோனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். மேலும் இப்படத்தின் ஷுட்டிங் அடுத்த ஒரு மாதத்திற்கு சென்னையில் தான் நடக்கவுள்ளது.
இதனால் ஷாருகான் சிலகாலம் சென்னையில் தான் தங்கி இருக்கப் போகின்றார். இந்த நிலையில் ஷாருக் கான் இஸ்லாமியராக இருந்தாலும் அவர் வீட்டில் விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார் சிலை வைத்து வழிபட்டு இருக்கின்றனர்.அவரது மனைவி கௌரி ஹிந்து குடும்பத்தில் பிறந்தவர் என்பது போல் தகவல் வெளியாகியுள்ளது.
விநாயகர் சிலையை போட்டோ எடுத்து ஷாருக் கான் ட்விட்டரில் பதிவிட அது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. அவரை Most Secular Indian என கமெண்டில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!