• Nov 19 2024

20 வயதில் மகன் இருந்தும்... 49 ஆவது வயதில் இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாகும் மணிரத்னம் பட நடிகை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் போனி கபூர். இவர் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு' போன்ற படங்களை தயாரித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவரின் மகன் அர்ஜுன் கபூர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். 


இவர் பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாகவும், கனவுக் கன்னியாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் மலைகா அரோராவை காதலித்து வருகிறார். மலைகா அரோரா மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'உயிரே' என்ற படத்தில் இடம்பெற்ற "தக்க தையா தையா" பாடலுக்கு நடனமாடி அசத்தி இருந்தார்.


மலைகா அரோராவுக்கு தற்போது கிட்டத்தட்ட 49 வயது ஆகிறது. இவர் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை கடந்த 1998-ஆம் ஆண்டு பலரின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த தம்பதிக்கு அர்ஹான் என்கிற ஒரு மகன் இருக்கிறார். அவருக்கு தற்போது 20 வயது ஆகிறது.

தனது கணவர் அர்பாஸ் கானை விவாகரத்து செய்த பிரிந்து கொண்ட பின்னர் அர்ஜுன் கபூர் மீது காதல் வயப்பட்ட மலைகா அரோரா, அவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். மலைகா அரோராவுக்கும் அர்ஜுன் கபூருக்கும் 12 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல நாட்களாக இருந்து வருகிறது. 


இதுதொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அர்ஜுன் கபூர் கூறுகையில் "தனக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை" எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மலைகா அரோராவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அப்பதிவில் "நான் சம்மதித்துவிட்டேன்" என பதிவிட்டு ஹார்டின் எமோஜிகளை மலைகா அரோரா போட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவர் தன்னுடைய 2ஆவது திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளதை தான் இவ்வாறு சூசகமாக பதிவிட்டுள்ளதாக கருதி அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


Advertisement

Advertisement