• Sep 21 2024

அதிரடியாக உள்நுழைந்த தனலட்சுமி...கடைசியில் அமுதவாணனுக்கு வைத்த செக்..வெளியானது ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எண்ணி விறுவிறுப்பாக செல்கின்றது.எனினும் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன், ஷிவின், ஏடிகே, கதிரவன் உள்ளிட்ட 7 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர். 

90 நாட்களை கடந்துள்ள நிலையில் இனி வரும் நாட்கள் மிக முக்கியமானவை என்பதால், அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்று வரை முன்னேற டாஸ்க்கில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கட்டாயத்திலும் உள்ளனர்.

தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் முக்கிய பிரபலங்கள் உள்நுழைந்து பல கலாட்டாக்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் பிக்பாஸ் வீட்டுக்குள் தனலட்சுமி உள்ளே வருகின்றார்.அத்தோடு அவர் ஒரு டாஸ்கை அமுதவாணனுக்கு கொடுக்கின்றார்.அதாவது அமுதவாணன் தனது முடியை கலர் பண்ணனும் என்று கூறப்படுவது போல அவரும் அப்படியே செய்கின்றார்.

இதோ அந்த ப்ரமோ....


Advertisement

Advertisement