• Nov 19 2024

18வது திருமண நாளைக் கொண்டாடும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா- ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் குட் நியூஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராகிய புதிதில் பல அவமானங்களைச் சந்தித்தாலும் தற்பொழுது தனக்கென ஓர் முக்கிய இடத்தைப் பிடித்து வைத்திருக்கும் நடிகர் தான் தனுஷ். இவர் நடிப்பில் தற்பொழுது வாத்தி என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இது விரைவில் வெளியாகவுள்ளது.

மேலும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைக் காதலித்து கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். 


இந்நிலையில் தாங்கள் பிரிவதாக 17.01. 2022 அன்று சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர்.தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க இரு வீட்டாரும் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து அண்மையில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் மீண்டும் சேர்ந்து வாழ தனுஷும், ஐஸ்வர்யாவும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது.

மேலும் மகன்களுக்காக மனதை மாற்றிக் கொண்டார்களாம்.னுஷும், ஐஸ்வர்யாவும் தாங்கள் மீண்டும் சேர்வது குறித்து திருமண நாள் அன்று அறிவிப்பு வெளியிடுவார்கள் என தகவல் வெளியானது. ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.


ஐஸ்வர்யா பற்றி நல்ல செய்தி சொல்வார் என்று எதிர்பார்த்தால் தன்னுடைய வாத்தி பட ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியிட்டார் தனுஷ். ஐஸ்வர்யாவோ தன் படமான லால் சலாமில் பிசியாக இருக்கிறார்.இதனால் நாங்கள் சேர்கிறோம் என்று இன்று அறிவிப்பு வருமா, வராதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement