• Sep 21 2024

பீர் அபிஷேகம் செய்த தனுஷ் ரசிகர்கள் - தீயாய் பரவும் வீடியோ

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

புதுச்சேரியை சேர்ந்த தனுஷ் ரசிகர்கள் இன்று காலை நானே வருவேன் படத்தின் ரிலீஸை ஒட்டி தியேட்டர் முன் வைக்கப்பட்டு இருந்த பேனருக்கு பீர் ஊற்றி அபிஷேகம் செய்த வீடியோ  தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகர் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் இன்று உலகமெங்கும்  பிரமாண்டமாக ரிலீசாகி உள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.

இப்படத்திற்கு  யுவன் சங்கர் ராஜா  இசையமைத்து உள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக அவர் நடித்துள்ள கதிர் கதாபாத்திரத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இவ்வாறு இருக்கையில் புதுச்சேரியை சேர்ந்த தனுஷ் ரசிகர்கள் இன்று காலை நானே வருவேன் படத்தின் ரிலீஸை ஒட்டி தியேட்டர் முன் வைக்கப்பட்டு இருந்த பேனருக்கு பீர் ஊற்றி அபிஷேகம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. அவர்களின் இந்த செயலுக்கு கண்டனக்குரல்களும் எழுந்து வருகின்றன.






Advertisement

Advertisement