தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவரின் நடிப்பில் இறுதியாக 'திருச்சிற்றம்பலம், நானே வருவேன்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து இவர் வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி படத்தில் தனுஷ் ஆசிரியராக நடிப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் இப்படத்தில் தனுஷுக்கு இரட்டை பாத்திரங்கள் என்றும் கூறப்படுகிறது. இதில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இவர்களோடு இணைந்து சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் பிரமாண்டமாக இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்வியை பின்னணியாக வைத்து அதில் காணப்படும் அரசியலை பேசும் படமாக 'வாத்தி' படம் இருக்கும் என ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. அத்தோடு இப்படமானது டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக வாத்தி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் எனவும் ஒரு செய்தி வெளியாகி இருக்கின்றது. அது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அந்தவகையில் தனுஷின் வாத்தி படம் அடுத்தாண்டு பெப்ரவரியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இதற்கான முக்கிய காரணம் என்னவெனில் இப்படமானது தெலுங்கில் 'சார்' என்ற டைட்டிலில் உருவாகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவிருந்தது. ஆனால் டிசம்பரில் தெலுங்கில் அதிகமான படங்கள் வெளியாகவிருப்பதால் திரையரங்குகள் கிடைப்பதில் சில பிரச்சினை உள்ளதாம். அதனால் தான் வாத்தி ரிலீஸ் தேதியை பெப்ரவரிக்கு மாற்ற படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இவ்வாறாக மறுபடியும் வாத்தி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளமையினால் அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!