தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக பல ஆண்டு காலமாக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் கோலிவுட்டில் மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகிலும் கலக்கி இன்று டோலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்திருக்கின்றார்.
அந்த வகையில் இவரின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'வாத்தி'. இப்படத்தினை வெங்கி அட்லூரி இயக்கியிருப்பதோடு இப்படத்தில் தனுஷ் ஒரு வாத்தியாராக நடித்துள்ளார்.
இப்படமானது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி உள்ளது. அதாவது இப்படத்தினை தமிழில் 'வாத்தி' என்ற பெயரிலும், தெலுங்கில் 'சார்' என்ற பெயரிலும் ரிலீஸ் செய்ய உள்ளனர் படக்குழுவினர்.
மேலும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக இப்படம் அமைந்து உள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருப்பதோடு, யுவராஜ் ஒளிப்பதிவும் செய்துள்ளார்.
அத்தோடு நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் நாக வம்சி தயாரித்துள்ளார்.
இப்படத்தின் உடைய ஷூட்டிங் நிகழ்வுகள் யாவும் முடிவடைந்த நிலையில் பின்னணி பணிகள் விறுவிறுப்பாகவும், மும்முரமாகவும் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் உடைய டீசர் ஆனது கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதாவது 'வாத்தி' திரைப்படம் ஆனது வருகிற டிசம்பர் 2-ஆம் திகதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.
Mark the Date. Our #Vaathi / #SIR is getting ready to take classes from 2nd Dec 2022! 📕🖊️✨ #SIRMovieOn2ndDec #VaathiOn2ndDec @dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @Fortune4Cinemas @SitharaEnts #SrikaraStudios pic.twitter.com/mBvDl8b5cM
மேலும் தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்' திரைப்படமானது இந்த மாதம் ரிலீசாகும் என கூறப்பட்டாலும், இன்னும் அதிகாரபூர்வமாக ரிலீஸ் திகதி அறிவிக்கப்படாமல் உள்ள நிலையில், டிசம்பர் மாதம் வெளியாக இருக்கின்ற வாத்தி படத்தின் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டு உள்ளமை தனுஷ் ரசிகர்கள் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
Listen News!