நடுரோட்டில் அரசு பேருந்தை மறித்து தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால், பேருந்தில் இருந்த பயணிகள் பெரும் அவதி அடைந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் - இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகி உள்ள திரைப்படம் நானே வருவேன். இப்படம் மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக ரிலீஸாகி உள்ளது. தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக நானே வருவேன் படத்தை ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால் ரிலீஸ் தேதியை மாற்றப்போவதில்லை என்கிற முடிவில் உறுதியாக இருந்தார் இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு. இதனைத் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை வருவதால் இதனை மிஸ் செய்ய விரும்பவில்லை என்றும் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இன்று நானே வருவேன் திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸாகியுள்ளது.
மேலும் இப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 8 மணிக்கு திரையிடப்பட்டது. இதையொட்டி இன்று அதிகாலையிலேயே தியேட்டர் முன் குவிந்த தனுஷ் ரசிகர்கள் பிரம்மாண்ட கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து தடபுடலாக கொண்டாடினர். எனினும் அதுகுறித்த வீடியோக்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இவ்வாறுஇருக்கையில் மதுரையை சேர்ந்த தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது பஸ்களை மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடுரோட்டில் அரசு பேருந்தை மறித்து தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால், பேருந்தில் இருந்த பயணிகள் அவதி அடைந்தனர். எனினும் இதுகுறித்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், தனுஷ் ரசிகர்களின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
Madurai #NaaneVaruvean FDFS 💯 Morattu kapraaaa💥🔥
Bus Mariyal @dhanushkraja Thalaivaaaa 😁😁😁
Mmala Tharamana sambavam 🎉@selvaraghavan @theVcreations #PS1 pic.twitter.com/oHTzXuezQM
Listen News!