• Sep 20 2024

ஐஸ்வர்யா செய்த அதே முறையை பின்பற்றிய தனுஷ்…நீதிமன்றம் அளித்த உத்தரவு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'சுள்ளான்' என்ற படத்தில் நடித்த நாளிலிருந்து இன்றுவரை ஒல்லியாக இருக்கும் காரணத்தினால் சுள்ளான் என்ற பட்டப்பெயர் கொண்டு ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவரே நடிகர் தனுஷ். இவர் நடிகராக அறியப்பட்டதை விட சூப்பர் ஸ்டாரின் மருமகனாக அறியப்பட்டமையே அதிகம். எனினும் இவருக்குள் உள்ள திறமைகளோ பல. அதாவது திரைப்படத் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர் எனப் பன்முகம் கொண்டு விளங்கி வருகின்றார்.

இவ்வாறாக திரைப்பிரபலங்களில் ஒருவராக கொடி கட்டிப் பறந்து வரும் தனுஷ் மீது முன்னர் புகார் ஒன்று பதிவாகியிருந்தது. அதாவது 2014-ஆம் ஆண்டு இவரின் நடிப்பில் ரிலீசான படம் 'வேலையில்லா பட்டதாரி'. இப்படத்தில் ஏனைய காட்சிகளை விட தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சிகள் அதிகளவில் இடம்பெற்று இருந்தது.

இதனால் இப்படத்தில் விதிகளை மீறி புகைப்பிடிக்கும் காட்சிகள் அதிகமாக வைக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும்போது திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகங்களும் உரிய முறையில் அப்படத்தில் இடம்பெறவில்லை எனவும் அவர் மீது புகார் எழுந்தது.

இதனையடுத்து தனுஷ் மீதும், அப்படத்தினை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் கடந்த 2014ஆம் ஆண்டு தமிழக அரசிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஒருவர் நடிகர் தனுஷ் மீதும் அவரது மனைவி ஐஸ்வர்யா மீதும் சைதாப்பேட்டை கோர்ட்டில் முறைப்பாட்டினை அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற சைதாப்பேட்டை கோர்ட் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கண்டிப்பான முறையில் உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், இதன் விசாரணைக்கு தடை கோரியும், இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் உள்ள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஐஸ்வர்யாவுக்கு அவ்வழக்கிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் ஐஸ்வர்யாவைத் தொடர்ந்து தற்போது இதே கோரிக்கையுடன் நடிகர் தனுஷும் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று பிரபல நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணைகளின் முடிவில் நடிகர் தனுஷ் விசாரணைக்காக சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார் நீதிபதி. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை மீண்டும் ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகி உள்ளன.

இதைக் கேள்விப்படட தனுஷ் ரசிகர்கள் 10-ஆம் திகதி ஆவது இந்த வழக்கு முடிவுக்கு வருமா என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement