• Sep 20 2024

காத்திருந்தும் இப்படி ஆகிடுச்சே-கடும் அப்செட்டில் தனுஷ்-அவருக்கா இப்படி நடக்கனும்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகி தியேட்டர்களில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வரும் திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷு கண்ணாவும், பிரியா பவானி சங்கரும் நடித்திருந்தனர். அதேபோல் தனுஷின் தோழியாக நித்யா மேனன் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.

  இதுதவிர பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, முனீஸ்காந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். அத்தோடு இப்படத்தின் கதையை நடிகர் தனுஷ் தான் எழுதி இருந்தார். 

இந்த நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் தனுஷின் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனதால் ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படமும் அமைந்துள்ளதால், பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில்  பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் நல்ல கலெக்ஷன் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையில் 'திருச்சிற்றம்பலம்' படம் வெளியான முதல் நாளிலே இணையத்திலும் கசிந்துள்ளது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோதமாக படங்கள் பைரசியில் வெளியாவதற்கு தடைகள் போட்டாலும் திரையரங்குகளில் வெளியாகும் முதல் நாளிலே படங்கள் இணையத்திலும் கசிந்துவிடுகிறது. எனினும் அந்த வகையில் தற்போது 'திருச்சிற்றம்பலம்' படம் இணையத்தில் லீக்காகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement