• Nov 14 2024

தனுஷ் ஸ்கூல் பையன் போல இருக்கிறார் ஒரு கிராம் கூட எடை கூடாது- புகழ்ந்து தள்ளிய பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கிறார். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என தொடர்ந்து பல பரிமாணங்களை தொட்டுக்கொண்டே இருக்கிறார்.இவர் 2002 துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்தார். இறுதியாக இவர் நடிப்பில வாத்தி திரைப்படம் வெளியானது.இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனத்தைக் கொடுத்ததோடு இப்படம் வசூலிலும் அள்ளிக் குவித்தது.


இதனை அடுத்து தனுஷ் கேப்டன் மில்லன் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தனுஷ் திருப்பதிக்கு சென்று மொட்டையடித்திருந்தார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


தனுஷ் நடித்த ஹிந்தி படமான ஷமிதாப் படத்தை இயக்கி இருந்த R பால்கி தற்போது அளித்து இருக்கும் பேட்டியில் தனுஷ் பற்றி வியந்து பேசி இருக்கிறார்.தனுஷ் தற்போது 40 வயதானாலும் பார்க்க ஸ்கூல் பையன் போல தான் இருந்து கொண்டிருக்கிறார். அவர் ஒரு நாளுக்கு 7 முறை சாப்பிட்டாலும் அவருக்கு ஒரு கிராம் கூட எடை கூடாது என பால்கி கூறி இருக்கிறார். இந்த விடயம் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement