• Nov 17 2024

தொகுப்பாளினியின் செயலால்.. வெட்கத்தில் தலை குனிந்த தனுஷ், சாய் பல்லவி.. ஓ இதுதான் விஷயமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் உருவான மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று 'மாரி 2'. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது டோவினா தாமஸ், வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ சங்கர், வினோத், அஜய் கோஷ், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.


இப்படத்தினுடைய ப்ரோமோஷன் நிகழ்வு ஒன்றில் தொகுப்பாளினி தனுஷ், சாய் பல்லவி குறித்து பேசிய வசனங்கள் தற்போது வைரலாகி வருகின்றது. அதுமட்டுமல்லாது இவரின் பேச்சைக் கேட்டதும் தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் முகம் வெட்கத்தில் சிவந்து போனமை குறிப்பிடத்தக்கது. 


அந்தவகையில் இவர் தனுஷ் குறித்துப் பேசுகையில் "உழைப்பும் திறமையும் இவர் முகவரி. 50வயதில் செய்ய வேண்டிய நல்ல செயல்களை இப்போதே செய்கின்றார். அதற்கு உதாரணம் கஜாப் புயல். கோடம்பாக்கத்தில் கால் பதித்தவரை உலக நாடுகள் அனைத்தும் உச்சம் தலையில் முத்தம் கொடுத்து வரவேற்கின்றது.

திறமையின் பொக்கிஷம். சாமான்ய மக்களின் சந்தோசம், வறுமைக்கு கை கொடுக்கும் இளகிய மனம். மாரி என்றால் மழை. மழை என்றால் கருணை. கருணையும் கலெக்சனும் சேர்ந்தால் தனுஷ். தமிழ் சினிமாவில் சாதனைகளை சரித்திரம் ஆக்கியவர். எம்.ஜி.ஆர், சிவாஜி. ரஜினி, கமல் இந்த மூன்றெழுத்து மந்திரங்களின் வெற்றி வரிசையில் தனுஷ் அவர்கள் இப்போது நம்மிடையே பேச வருகின்றார்" எனக் கூறினார். 


இதனைத் தொடர்ந்து வெட்கப்பட்டுக்கிட்டே மேடை ஏறிய தனுஷ் "சத்தியமாக இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை" எனக் கூறுகின்றார். அதற்கு அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். 

இதனைத் தொடர்ந்து அந்த தொகுப்பாளினி சாய் பல்லவி குறித்துப் பேசுகையில் "அமைதியான உருவம் அன்பின் சிகரம். சிரிப்பின் அழகு. ஒவ்வொரு இளைஞனும் தன் மனதிற்குள் சாய் பல்லவி போட்டுக் காத்துக் கொண்டிருக்கின்றான். தமிழில் தன் முதல் படமான கருவையே சுமந்து நம்மைக் கலங்க வைத்தவர். அமைதியின் சின்னமான சாய் பல்லவியை ஆட்டோ ஓட்டும் ஆனந்தியாக மாரியில் மாற்றி உள்ளனர். தமிழில் தொடர்ந்து இன்னும் பல படங்கள் நடிக்க வேண்டும்" எனக் கூறினார்.

இவரின் கவிதை மொழிகளைக் கேட்டு சாய் பல்லவியும் வெட்கப்பட்டுகிட்டே மேடை ஏறி பேசி இருக்கின்றார்.

Advertisement

Advertisement