தன்னுடைய சிறந்த நடிப்பின் வாயிலாக தமிழ் சினிமாவையே கட்டிப்போட்ட ஒருவரே நடிகர் தனுஷ். மற்ற நடிகர்களைப் போலவே இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதனால் இவரின் நடிப்பில் உருவாகும் படங்களை எதிர்பார்த்து எப்போதுமே ஒரு கூட்டம் காத்திருக்கும். தனுஷ் சிறந்த நடிகர் மட்டுமல்லாது சிறந்த ஒரு பாடகரும் கூட.
அந்தவகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது 'விடுதலை' என்ற படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியும், நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது இவர்களுடன் இணைந்து கவுதம் மேனன், ராஜீவ் மேனன், பாலாஜி சக்திவேல் என தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
அத்தோடு ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படத்திற்கு மேலும் பிரமிப்பூட்டுடும் வகையில் இளையராஜா இசையமைக்கிறார். அந்தவகையில் விடுதலை படமானது இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது. இதில் முதல் பாகம் வருகிற மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மேலும் இப்படத்தின் உடைய வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் கைப்பற்றி இருக்கின்றது. விடுதலை படத்தின் உடைய ஷூட்டிங் யாவும் முழுமையாக நிறைவடைந்து தற்போது அதன் பின்னணி பணிகள் விறுவிறுப்பாகவும் மும்முரமாகவும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது விடுதலை படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இப்படத்தின் உடைய பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் வருகிற பிப்ரவரி 8-ஆம் தேதி விடுதலை படத்தின் முதல் பாடலான 'உன்னோட நடந்தா..' என்கிற பாடலை படக்குழுவினர் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது இதுகுறித்த புரோமோ வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த பாடலின் உடைய ஸ்பெஷல் என்னவென்றால், இதனை தனுஷ் தான் பாடி இருக்கிறார். அந்தவகையில் இளையராஜா இசையில் தனுஷ் பாடும் முதல் பாடல் இதுவாகும்.
The first single #Onnodanadandhaa from #Viduthalai part 1 releasing on Feb8th
🎼 @ilaiyaraaja ⁰
🎤@dhanushkraja & #AnanyaBhat
✒️ #Suga
Promo from the recording session#Vetrimaaran @VijaySethuOffl @sooriofficial @rsinfotainment @SonyMusicSouth @RedGiantMovies_ pic.twitter.com/SjrJnXvC6K
இதற்காக என்றே இளையராஜாவிடம் பிரத்தியேகமாக பயிற்சி எடுத்து தனுஷ் இப்பாடலை பாடி இருக்கிறார் என்பது அப்ரோமோ வீடியோவின் மூலமாகத் தெரிகின்றது. தனுஷுக்கு இளையராஜா பாட சொல்லிக்கொடுக்கும் காட்சிகள் உடன் கூடிய வீடியோவும் தற்போது வெளியாகியமையைத் தொடர்ந்து அது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது.
Listen News!