• Sep 20 2024

ஏகே62வில் அஜித்துக்கு தனுஷ் வில்லனா? மாஸ்டர் பிளான் போட்ட விக்னேஷ் சிவன்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார் தற்போது துணிவு படத்தில் நடித்துள்ளார்.

அத்தோடு வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகுமென்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் சில்லா சில்லா பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகின்றது.

மேலும் இப்படத்தினை அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் பணியாற்றவிருக்கும் அஜித் சில காலம் ஓய்விற்கு பின்னர்  அடுத்த ஆண்டு ஷூட்டிங்கை ஆரம்பிக்கவுள்ளார்.

இவ்வாறுஇருக்கையில்  ஏகே 62 படத்தில் நடிகர் தனுஷ் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாகவும் இதற்கான ஷூட் அஜித்தின் டூர் முடிந்ததும் எடுப்பார்கள் என்று சொல்லப்படுகின்றது.

இப்படியொரு பெரிய பிளானை சைலெண்ட்டாக விக்னேஷ் சிவன் போட்டுள்ளாரா என்று பலர் ஆச்சரியப்பட்டும் நடந்தால் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்தும் வருகிறார்கள்.



Advertisement

Advertisement