• Sep 20 2024

செம ஜாலியாக ஜாக்கிங் சென்ற தனுஷ்- திடீரென வைரலாகும் வீடியோ- செம குஷியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய வாத்தி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்து. இதனைத் தொடர்ந்து இயக்குநர் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்த வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இப்படத்தில் இவருடன்  பிரியங்கா மோகன், சந்தீப் கிஷான், ஷிவ ராஜ்குமார் எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.


இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.தற்போது கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் மதுரையில் தீவிரமாக நடந்து வருகிறது. 


இந்நிலையில் தனுஷ் காலையில் ஜாகிங் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.அண்மையில் கூட தனுஷ் மும்பை ஏர்போட்டில் நடந்து சென்ற வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement