• Sep 20 2024

சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தில் முக்கிய வேடத்தில் கமிட்டாகியுள்ள தனுஷ்-அதுவும் என்ன கதாப்பாத்திரத்தில் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக தனுஷை வைத்து இயக்கிய அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில் இவர் தற்பொழுது காமெடி நடிகர் சூரியை வைத்து விடுதலை என்னும் படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 


இயக்குநர் கௌதம் வாசு தேவனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்

இந்த நிலையில் இந்த படத்தின் தற்போது தனுஷ் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை தனுஷ் பாடியதாகவும் இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தினை அடுத்து வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்னும் திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement