• Nov 10 2024

பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் தனுஷ்…விவாகரத்துக்கு காரணம் இவரா?..வெளியாகிய புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'துள்ளுவதோ இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஒருவராக வளர்ந்து வருபவரே நடிகர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது கோலிவுட்டையும் தாண்டி டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகிலும் கால்பதித்து பிஸியான ஒரு நடிகராக வலம் வருகிறார்.

இவ்வாறாக படங்களில் ஓய்வில்லாமல் நடித்து வருகின்ற இவரின் நடிப்பில் 'தி கிரே மேன்' என்ற ஹாலிவுட் படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. ரூஸோ சகோதரர்கள் இயக்கிய இப்படத்தில் அவிக் சான் என்கிற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து டோலிவுட்டில் 'வாத்தி' படத்தினையும், தமிழில் 'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்', 'கேப்டன் மில்லர்' என ஏராளமான படங்களையும் தனது கைவசம் வைத்துள்ளார் தனுஷ். இவற்றில் 'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' ஆகிய படங்களின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் விரைவில் ரிலீசாகவும் உள்ளன.

இவ்வாறாக நடிப்பு, குடும்பம் என சந்தோசமாக இருந்து வந்த நடிகர் தனுஷ் கடந்த ஜனவரி மாதம் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். குறிப்பாக 18 ஆண்டுகளிற்கு மேலாக ஒன்றாக இணைந்து சந்தோசமாக வாழ்ந்துவிட்டு அவர் திடீரென விவாகரத்து செய்வதாக அறிவித்தது திரையுலகில் பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் இவர்களின் பிரிவுக்கு முக்கிய காரணம் ஒரு நடிகை தான் என்றும் கூறப்பட்டு வந்தது.

அதாவது தனுஷ் நடிகைகளுடன் நெருக்கம் காட்டியது பிடிக்காததால் தான் ஐஸ்வர்யா அவரை பிரியும் முடிவுக்கு வந்ததாகவும் ஏராளமான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி இருந்தன. எனினும் இவர்களின் விவாகரத்துக்கான உண்மையான காரணம் என்னவென்று இதுவரை இவர்கள் இருவரும் வெளிப்படையாக சொல்லவில்லை.

இப்பிரச்சினையே இன்னும் முடிவிற்கு வராத நிலையில் தற்போது நடிகர் தனுஷுடன் பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலி கானின் மகளும், நடிகையுமான சாரா அலி கான் நெருக்கமாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அதாவது தனுஷ் நடித்த 'கிரே தி மேன்' படத்தின் இயக்குநர்களான ரூஸோ சகோதரர்கள் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தனர்.

அப்போது படக்குழுவினர் இணைந்து பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அந்தப் பார்ட்டியில் ஏராளமான பாலிவுட் நடிகர் மற்றும் நடிகைகள் கலந்துகொண்டிருந்தனர். அவர்களைப் போன்றே சாரா அலிகானும் அந்தப் பார்ட்டியில் கலந்துகொண்டார்.

சாரா அலிகான் பார்ட்டிக்குள் நுழையும் போதே தனுஷுடன் தான் வருகை தந்தார். அதுமட்டுமன்றி இவர் தனுஷின் கையை இறுக்கமாக பிடித்த வண்ணம் தான் வந்திருந்தார். புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் போது கூட சாரா அலிகான் அவரது கையை விடவில்லை. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா? "தனுஷின் விவாகரத்துக்கு சாரா தான் காரணம்" என கூறி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement