• Sep 20 2024

சன்பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மீது கடும் கோபத்தில் இருக்கும் தனுஷ்- அடடே இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கும் தனுஷ் நடிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.குடும்ப பாங்கான கதாக்களத்துடன் அமைந்த காதல் படமாக இப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வருகின்றது.

இப்படத்தில் ப்ரியாபவானி ஷங்கர், நித்யாமேனன் ,ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அனிரூத்- தனுஷ் கூட்டணி அமைந்ததால் ரசிகர்கள் செம குஷியடைந்தனர்.


அத்தோடு இப்படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன என்பதும் முக்கியமாகும்.அத்தோடு இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டு இருந்தது

இந்நிலையில் படத்தின் எதிர்பாராத வெற்றியால் தனுஷ் மகிழ்ச்சியாக இருந்தாலும், ரிலீஸுக்கு முன்னர் படத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் பாராமுகம் காட்டிய தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் மேல் அதிருப்தியில் உள்ளாராம். இதனால் சன் தொலைக்காட்சியில் நேர்காணலுக்கு கேட்ட போது கூட அதற்கு மறுத்துவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Advertisement

Advertisement