• Sep 20 2024

நகையை திருடி மாட்டிக்கொண்ட தனுஷ்-அவருக்கு உடந்தை அந்த பெண் தான்.. உண்மையை உடைத்த கஸ்தூரி ராஜா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் தனுஷ்.இவர் தற்போது பாலிவுட்,ஹாலிவுட்  என பல படங்களில் கெமிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார்.


சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தான் அட்ராங்கி ரே, தி கிரே மேன், திருச்சிற்றம்பலம் .இப்படங்கள் நல்ல விமர்சனத்தை பெற்றதோடு மாத்திரமல்லாது வசூலிலும் அள்ளிக்குவித்து வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில் திருச்சிற்றம்பலம் ஆடியோ லான்ச் விழாவில் எது மாஸ் என்றால் அம்மா, அப்பாவை கடைசி வரைக்கும் குழந்தையா பாத்துக்கிறது தான் மாஸ் என்று தன் பெற்றோரை புகழ்ந்து பேசி ரசிகர்களுக்கு அறிவுரை கூறியது தற்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது.



இதனை தொடர்ந்து தனுஷின் பெற்றோர்கள் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றினை கொடுத்துள்ளார்.அந்த விடயம் ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வருகின்றது.



அதில், ஆசையாய் வெச்சிருந்த தனுஷ் அம்மாவின் செயின் வீட்டில் தொலைந்து போனது. செயினை தேடியும் கிடைக்கவில்லை. தனுஷும் தன் பங்கிற்கு செயினை தேடினார். அப்படியே சென்று பல வருடம் கழித்து நான் தான் எடுத்தேன் அம்மா என்று கூறினாராம் தனுஷ்.



மேலும் இப்படி பலமுறை பலவற்றை எடுத்து வெச்சிட்டு அவரே தேடுவார் என்று அவர் அம்மா தெரிவித்துள்ளார். இரண்டாம் பெண் தனுஷுக்கு கையாள் என்று காமெடியாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.




Advertisement

Advertisement