பிரபல இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் 'காதல் கொண்டேன்' என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமாகி முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சோனியா அகர்வால். அறிமுகப் படத்திலேயே தனது திறமையான நடிப்பின் வாயிலாக ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தவர். இதனைத் தொடர்ந்து இவர் '7ஜி ரெஜின்போ காலனி, மதுர, கோவில், புதுப்பேட்டை' போன்ற பல படங்களில் நடித்திருக்கின்றார்.
சினிமாத் துறையில் நுழைந்து குறுகிய காலத்திலேயே அவர் இயக்குநர் செல்வராகவனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனினும் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக திருமணமான சில ஆண்டுகளுக்குள்ளேயே விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவர் இரண்டாம் திருமணம் செய்கிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். அத்தோடு யார் மாப்பிள்ளை என்ற கேள்வி எல்லாம் எழுப்பிய நிலையில் அதற்கு பதில் கூறியுள்ளார் சோனியா அகர்வால் .
அதாவது 'எனது wedding மெஹந்தி இவ்வளவு சின்னதாக இருக்காது' என கூறி இருக்கிறார். அதனால் இது அவரது திருமண மெஹந்தி இல்லை என்பது தெரிகிறது.
நீங்கள் மட்டும் தான் திருமணம் செய்வீர்களா என கேள்வி கேட்டவருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் அவர். நீங்களே பாருங்க
Listen News!