திருச்சிற்றம்பலம் படத்தை போன்று நானே வருவேன் படத்துக்கு காலை 8 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்டது.
செல்வராகவன் இயக்கத்தில் அவரது தம்பி தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை இந்துஜா, மற்றும் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லிரம் ஆகியோர் நடித்துள்ளனர்.
தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் இதற்கு முன் ரிலீசான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால், இப்படத்திற்கும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
அதுமட்டுமின்றி தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் ரிலீசான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால், நானே வருவேன் படமும் அந்த அளவு வரவேற்பை பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறுஇருக்கையில் நானே வருவேன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாகி உள்ளது.
வழக்கமாக தனுஷ் படங்களுக்கு அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அவர் நடிப்பில் ரிலீசான படங்களுக்கு 4 மணி காட்சி திரையிடப்படவில்லை. அத்தோடு திருச்சிற்றம்பலம் படத்தை போன்று நானே வருவேன் படத்துக்கு காலை 8 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதையொட்டி ரசிகர்கள் தியேட்டர்களில் ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
அதேபோல் தியேட்டர் முன் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் ஆரவாரமாய் கொண்டாடினர்.மேலும் இப்படத்துக்கு பெரியளவில் புரமோஷன் செய்யப்படவில்லை என்பதால், வரவேற்பும் குறைந்தளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனுஷ் ரசிகர்கள் அதையெல்லாம் தவிடுபொடியாக்கி பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்துள்ளனர்.
.@RamCinemas- FDFS Celebrations🔥🏹#NaaneVaruvean #NaaneVaruveanFromToday #NaaneVaruveanFDFS pic.twitter.com/VlA2SJpYdT
Time to meet !! 🏹🥁#NaaneVaruvean @dhanushkraja pic.twitter.com/9ZZZ10iyZE
Listen News!