நடிகர் தனுஷ் மற்றும் ஜஸ்வர்யாவின் மூத்தமகன் தான் யாத்ரா .இவர் படிக்கும் பள்ளியில் விளையாட்டு துறையின் கேப்டனாக அண்மையில் தேர்வானார்.
அந்த சந்தோஷ விஷயத்தை அவரது பெற்றோர்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் நேரில் கண்டு சந்தோஷப்பட்டார்கள்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்களும் வாழ்த்து கூறி வந்தார்கள்.
இந்த நிலையில் அதே பள்ளியில் பயிலும் இன்னொரு பிரபலத்தின் பேத்தி குறித்து ஒரு சூப்பர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தனுஷின் மகன் யாத்ரா சீனிர் விளையாட்டு அணிக்கு கேப்டன் ஆகியுள்ள நிலையில் நடிகர் எஸ்வி சேகரின் பேத்தியும் நடிகர் அஸ்வின் சேகரின் மகளுமான அர்னா சேகர் ஜுனியர் அணிக்கு கேப்டனாகி உள்ளார்.
இதனை எஸ் வி சேகர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Listen News!