நடிகர் தனுஷ் ருவிட்டர் கணக்கில் இருக்கும் புளூடிக் நீக்கப்பட்ட விசயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவருடைய முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் அதிகமாக குவிய தொடங்கின. தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதைகண்டேன் போன்ற பல படங்களில் நடித்தார். தன்னுடைய இயல்பான நடிப்பினால் பல ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார்.
இவர் நடிகராக மட்டுமன்றி திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் ,திரைக்கதையாசிரியர், இயக்குநர் என பல்துறை திறமை கொண்டவராக விளங்குகின்றார்.
இவ்வாறு இருக்கையில் ருவிட்டர் நிறுவனம் பிரபலங்களின் ருவிட்டர் கணக்கை ஆய்வு செய்து புளூடிக் வழங்குவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் தனுஷ் ருவிட்டர் பக்கத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே புளூடிக் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இந்த நிலையில் திடீரென இன்று தனுஷ் ருவிட்டர் பக்கத்தில் புளூடிக் இல்லாமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
தனுஷ் தமிழ் திரையுலக நடிகர் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என பான் வேர்ல்டு நடிகராக இருக்கும் நிலையில் அவரது ருவிட்டர் கணக்கில் உள்ள புளூடிக் நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து குழப்பங்கள் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் தனுஷ் வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்தபோது மீண்டும் ருவிட்டர் புளூடிக் பெறுவதற்காக முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் புளூடிக் கிடைக்கும் என்றும் குறிப்பிடுகின்றனர்.
பிற செய்திகள்
- நடிகை சுகன்யாவின் மகள் சினிமாவில் என்றி கொடுக்கப்போகின்றாரா… இதோ புகைப்படம்..!
- ஷோபாவை பலமுறை அடித்திருக்கிறேன்: விஜய்யின் அப்பா கூறிய விடயம்..!
- பரபரக்கும் பாக்கியலட்சுமி சீரியல்-இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது..? இதோ எபிசோட் அப்டேட்
- விஜய் 67 படத்திற்கு லோகேஷ் வாங்கும் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா-வாயடைத்துப் போன ரசிகர்கள்..!
- சந்திரமுகி 2 படத்தில் ஹீரோயினி இவங்க தானாம்- வெளியான தகவலால் குழம்பி தவிக்கும் ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!