• Sep 20 2024

தனுஷின் ''வாத்தி'' படக்குழு கொடுத்த அடுத்த ட்ரீட்... சூப்பர் ஹிட் நாடோடி மன்னன் வீடியோ பாடல் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கடின உழைப்பும் விடாமுயற்சியும் அசாத்திய திறமையும் ஓர் மனிதனை எந்த உச்சத்திற்கும் எடுத்து செல்லும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்பவர் நடிகர் தனுஷ். தற்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகராகவும் இந்திய சினிமாவில் இன்றியமையாத நடிகர்களில் ஒருவராகவும் உயர்ந்திருக்கிறார்.

 முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் வாத்தி (SIR). தனுஷுடன் இணைந்து சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் வாத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

J.யுவராஜ் ஒளிப்பதிவில், நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, வாத்தி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்க, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட, கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸான வாத்தி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாகஸ் ஆபீஸில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 

இந்நிலையில், வாத்தி படத்திலிருந்து நாடோடி மன்னன் வீடியோ பாடல் தற்போது வெளியாகி உள்ளது. அசத்தலான அந்த வீடியோ பாடல் இதோ…


Advertisement

Advertisement