• Sep 20 2024

பிரேமம் பட நடிகைக்கு ஜோடியாகும் துருவ் விக்ரம்! அடுத்த மாதமே ஷூட்டிங்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

பாலா இயக்கிய சேது திரைப்படம் மூலம் மாஸ் ஹீரோவாக ப்ரொமோட் ஆனார் விக்ரம். தற்போது கோலிவுட்டின் வெரைட்டியான நடிகர்களில் ஒருவராக கலக்கி வரும் விக்ரம், தற்போது தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். 

அதேபோல் அவரது மகன் துருவ் விக்ரமும் கோலிவுட்டின் இளம் ஹீரோவாக வலம் வருகிறார். இவர் ஆதித்யா வர்மா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானர்.

தெலுங்கில் வெற்றிப் பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான ஆதித்யா வர்மா, முதலில் பாலா இயக்கத்தில் வர்மா என்ற டைட்டில் தொடங்கியது. 


பாலாவின் மேக்கிங்கில் திருப்தி இல்லாததால் கிரீஷாயாவை இயக்குநராக்கினார் விக்ரம். ஆனாலும் தெலுங்கில் மாஸ் காட்டிய அர்ஜுன் ரெட்டி படத்தின் ஒரிஜினல் வெர்ஷன் அளவிற்கு ஆதித்யா வர்மா இல்லாமல் போனது.

அதன்பின்னர் அவரது அப்பா விக்ரமுடன் இணைந்து மஹான் படத்தில் நடித்திருந்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்தப் படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியானது. 


இதை தொடர்ந்து கபடி வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளார் மாரி செல்வராஜ். அந்த படத்தில் நடிப்பதற்கு துருவ் விக்ரம் கமிட்டாகி இருந்தார்.

இந்த நிலையில், குறித்த படத்திற்கு துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பிரேமம் பட நடிகை நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.மாரி செல்வராஜ் அடுத்த மாதமே   ஷூட்டிங்கை ஆரம்பிக்க உள்ளாராம்.

Advertisement

Advertisement