தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் ஜூன் 1ந் தேதி பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகியது தான் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட். இப்படத்தை நடிகர் மாதவனே இயக்கி நடித்துள்ளார்.
இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை இத்திரைப்படம் விவரித்துள்ளது.
இப்படத்தில் 80 வயதான நம்பி நாராயணனாக மாதவன் நடித்துள்ளதோடு இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது.
ஆனாலும் பெரிதாக வசூல் புரியவில்லை என்ற தகவல் வெளியானது. மேலும் இந்தப்படத்தை எடுப்பதற்காக மாதவன் தனது வீட்டை விற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இதனை மறுத்துள்ள மாதவன், "தயவு செய்து யாரும் என் தியாகத்தை அதிகமாக ஆதரிக்காதீர்கள். நான் எனது வீடு உள்ளிட்ட எதையும் இழக்கவில்லை. உண்மையில் ராக்கெட்ரி படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவரும் மிகவும் பெருமையுடன் இந்த ஆண்டு அதிக வருமான வரி செலுத்துவார்கள். கடவுளின் அருளால் இந்தப் படத்தால் அனைவரும் நல்ல லாபம் ஈட்டினோம். நான் இன்னும் என் வீட்டில் தான் வாழ்கிறேன்" என்று விளக்கம் அளித்துள்ளார்.
@ActorMadhavan @SimranbaggaOffc @PMOIndia @Suriya_offl pic.twitter.com/lO4MyICU0J
Listen News!