தமிழில் சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் விக்ரம். இவர் கதாபாத்திரத்திற்காக எந்த அளவு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்க தயங்காதவர்.
தன் அசாத்திய நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.இவர் தற்பொழுது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா' படத்திலும் மற்றும் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் நடித்துள்ளார்.
இதில் 'கோப்ரா' படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதியும், 'பொன்னியின் செல்வன்' படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் 'சியான் 61' நடித்து வருகின்றார். இப்படத்தின் பூஜை அண்மையில் தான் போடப்பட்டது.
இந்நிலையில் விக்ரம் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது தன் சிறுவயது ஆசைகள் பற்றியும் பள்ளி மதிப்பெண்கள் பற்றியும் கூறியுயுள்ளார். அவர் கூறியதாவது, நான் பள்ளி படிக்கும்போது என் பெற்றோருக்கு நான் டாக்டர் ஆகவேண்டும் என்றுதான் விருப்பம்.
எனக்கும் நன்றாக படித்து டாக்டர் ஆகவேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் என் பிளஸ் 2 மதிப்பெண்கள் குறைந்ததால் எனக்கு டாக்டர் சீட் கிடைக்கவில்லை. அடுத்தது பல் மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த படிப்பை படிக்கவும் என் மதிப்பெண் ஒத்துழைக்கவில்லை.
இந்நிலையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு IAS ஆகலாம் என நினைத்தேன். அதுவும் நடக்கவில்லை என்றார் விக்ரம். இவ்வாறு தன் சிறு வயது நிறைவேறாத ஆசையை சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் விக்ரம் பேசியுள்ளது தற்போது வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது
Listen News!