• Nov 17 2024

லிவ்விங் டுகெதரில் வாழும்போதே கர்ப்பமானாரா நடிகை அமலா பால்? பிரபலம் கிளப்பிய சர்ச்சை

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் அமலாபால். இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மைனா திரைப்படம் தான். 

இதையடுத்து,  தலைவா, வேலையில்லா பட்டதாரி,  வேட்டை போன்ற பல படங்களில் நடித்தார். தலைவா படத்தில் நடித்தபோது இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலிக்க தொடங்கிய அவர் பிறகு திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமணம் இரண்டே வருடங்களில் முறிந்தது. 

அதனையடுத்து சினிமாவில் கவனம் செலுத்தி சிங்கிளாக வலம் வந்த அமலா பால் கடாவர் படத்தை தயாரித்து மீண்டும் சினிமாவில் வலம் வரத்தொடங்கினார். 


அண்மையில் இவர் நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணமாகிய சில மாதங்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படம் மூலம் தெரிவித்துள்ளார் நடிகை அமலாபால். 

இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் ஒருவர் அமலா பால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். 

அதாவது, நடிகை அமலா பால் திருமணத்துக்கு முன்பே ஜெகத் தேசாய் உடன் லிவ்விங் டுகெதரில் வாழ்ந்து வந்த நிலையில், ஒருவேளை திருமணத்திற்கு முன்னாடியே கர்ப்பம் ஆகியிருப்பாரோ? என சந்தேகத்துடன் சர்ச்சையை கிளப்பியுள்ளார். தற்போது இது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

Advertisement