இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தில் இருந்து வெளியான முதல் பாடலான ஜிந்தா பந்தா, வந்த எடம் மற்றும் தும்மே துளிபெலா என இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
இப்படம் வெளியான 24 மணி நேரத்தில் 46 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.பொதுவாக அனிரூத் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருவதுண்டு.அதே நேரம் பல சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு.இவருடைய இசையில் டாக்டர் படத்திலிருந்து வெளியான 'ஸோ பேபி' பாடல் ஒரே வாரத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை யூடியூபில் சாதனை பெற்றது.
ஆனால் இப்பாடல் ஆங்கிலத்தில் வெளியான ஒரு புகழ் பெற்ற ஆல்பத்தின் அப்பட்டமான காப்பி என சர்ச்சை வெடித்தது. அதே போல பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலும் காப்பி சர்ச்சையில் சிக்கியது.அதே போல ஜவான் படத்தின் முதல் பாடலான 'வந்த இடம்' பாடல் வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த பாடல் இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில் இந்த பாடலைக் கேட்ட ரசிகர்கள் இந்த பாடல் சிம்பு நடித்த மாநாடு படத்தில் வரும் maanadu voice of unity bgm போல இருக்கிறது என்றும், ஜவான் படத்திலும் தனது காப்பி பேஸ்ட் வேலையை அனிரூத் செய்துவிட்டார் என்றும், இரண்டு பாடலையும் ஒப்பிட்டு இணையத்தில் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே ஜவான் படம் பேரரசு படத்தின் காப்பி என்று கருத்து நிலவி வரும் நிலையில் பாடலும் காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளது.
Listen News!