• Nov 10 2024

இந்து மதக்கடவுள்களை அவமதித்தாரா உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி..? ஐகோர்ட்டு வழங்கிய அதிரடி உத்தரவு

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கடந்த ஏப்ரல் 30-ந்தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'மலக்குழி மரணங்கள்' என்ற தலைப்பில் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி கவிதை ஒன்றை வாசித்தார்.

அந்த கவிதை இந்து மதக்கடவுள்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறி இந்து முன்னனி அமைப்பின் சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில், விக்னேஷ்வரன் என்ற விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளின் கீழ் அபிராமபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி விடுதலை சிகப்பி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். மேலும் அதில் கடவுளை அவமதிக்கும் வகையில் தான் பேசவில்லை எனவும், அரசியல் பழிவாங்கும் நோக்குடன் அளிக்கப்பட்ட புகாரில் காவல்துறை தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கு நீதிபதி கே.ஜி.திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்து விடுதலை சிகப்பிக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement