வில்லன் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட இந்த படத்தில் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்ததால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருந்தது. அத்தோடு இதில் அஜித் பாதி நேரம் பேருந்து கண்டக்டராகவும், மீதி நேரம் அதிரடி கொள்ளையனாக நடித்திருந்தார். அத்தோடு கொள்ளையடிக்கும் பணத்தை எல்லாம், ஊனமுற்ற ஆதரவற்ற மக்களுக்கு கொடுத்து உதவி செய்கிறார்.
ஏன் கொள்ளையடிக்கிறார் யாருக்காக கொள்ளை அடிக்கிறார் என்ற பல கேள்விக்கு ஃப்ளாஷ்பேக் மூலம் விடை கிடைக்கிறது.அத்தோடு மனநிலை சரியில்லாத தம்பியை அம்மா, அப்பா வெறுத்து ஒதுக்க... தம்பியுடன் வீட்டைவிட்டு வெறியேறும் அஜித், தம்பியை அம்மா ஸ்தானத்தில் பார்த்துக்கொள்கிறார். அத்தோடு தம்பியை ஒரு ஆனாதை இல்லத்தில் தங்க வைத்துவிட்டு அவனைப்போன்று இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு கொள்ளை அடித்த பணத்தில் உதவி செய்து வருகிறார்.
மேலும் இந்த பிளாஷ்பேக் கதையில் வரும் குட்டி அஜித்தான ஷிவா மற்றும் விஷ்ணு கதாபாத்திரம் தான் படத்திற்கு ஆணிவேர் ஆகும். அத்தோடு இந்த கதாபாத்திரத்தில் நடித்த தினேஷ் ஷா மற்றும் நரேஷ் ஷா இருவரும் 20 வருடங்களுக்கு பின்னர் யூடியூப் சேனல் பேட்டி அளித்துள்ளனர். அந்த பேட்டியில், வில்லன் படத்தில் நடிக்கும் போது நான்கு முறை தான் அஜித் சாரை பார்த்திருக்கிறோம். அவர் ஷூட்டிங் ஸ்பார்ட்டுக்கு எப்போ வந்தாலும் கூட்டம் கூடிவிடும்.
ஒரு சீனில் நான் சரியாக அழவில்லை,என்னை அழைத்த ரவிக்குமார் நல்ல அழவேண்டும் என்றார். சரி என்று திரும்புவும் நடித்தேன் அப்போது சரியாக அழாததால் பளார் என்று கன்னத்தில் மூன்று முறை அடித்தார். எல்லாரும் என்னை பார்த்துக்கொண்டு இருந்ததால் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.எனினும் இதையடுத்து ஒருவழியாக அந்த சீனை நடித்து முடித்துவிட்டேன். அதன் பின் கேஎஸ் ரவிக்குமார் சார் என்னிடம் வந்து, அந்த சீன்ல நீ நல்ல நடிக்க வேண்டும் என்றுதான் அடித்தேன் என்று சாரி கேட்டார்.
அந்த விஷயத்தை என்னால் மறக்கவே முடியாது இப்பவும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரவிக்குமார் சாரை வீட்டிற்கு போய் பார்ப்பேன் நல்ல வாய்ப்பு வந்தால் நிச்சயம் சொல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். மேலும் அந்த படத்திற்கு பிறகு அஜித்தை பார்க்க பலமுறை முயற்சி செய்தோம். அவரின் வீட்டிற்கு வெளியேகூட நின்றோம்.ஆனால் அவரை பார்க்க முடியவில்லை. மீண்டும் அவருடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கு என்று இருவரும் அந்த பேட்டியில் கூறியுள்ளனர்.
Listen News!