• Nov 14 2024

என்னது பிரகாஷ் ராஜ் த்ரிஷாவை லவ் பண்ணினாரா..? அவர் செய்த அதே செயலை அம்மணியும் பண்ணியிருக்காங்களே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த வில்லன் நடிகர் என்றால் அது நடிகர் பிரகாஷ் ராஜ் தான். இவர் திரைப்பட திரைப்பட நடிகர் மட்டுமல்லாது இயக்குநர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட கலைஞ்சர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகின்றார். 


தமிழில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட இவர் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். மேலும் இவர் 'காஞ்சிவரம்' என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் 2007-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார். 


அதுமட்டுமல்லாது 'இருவர்' என்ற திரைப்படத்துக்காக 1998-ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார். பிரகாஷ் தற்போது வயோதிப தோற்றத்தை அடைந்து விட்டாலும் இன்றும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தே வருகின்றார்.

இவ்வாறாக பல படங்களில் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தாலும், இவரின் படங்களில் பலருக்கும் பிடித்த படம் என்றால் அது 'கில்லி' தான். விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். மேலும் இப்படத்தில் இவர் "செல்லம்" என்ற வசனம் இன்றும் பிரபலமாகவே இருக்கின்றது.

இந்த நிலையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ ஆனது ட்ரெண்டாகி வருகின்றது. அதாவது பிரகாஸ் ராஜ் த்ரிஷாவை லவ் பண்ணியதாக கூறும் வகையில் 'கில்லி' படத்தின் சீனை மையமாக வைத்து அந்த காமெடி வீடியோவை எடிட் செய்து இருக்கின்றார்கள்.

இதனைப் பார்த்த பிரகாஷ் ராஜ் அந்த வீடியோவை எடிட் பண்ணியவருக்கு நன்றி தெரிவித்து அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருக்கின்றார். அதுமட்டுமல்லாது "ஐ லவ் யூ செல்லம்" எனவும் தனது பாணியில் த்ரிஷாவிற்கு குறிப்பிட்டிருக்கின்றார்.


இவரைப் போலவே த்ரிஷாவும் அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement