• Nov 14 2024

இரண்டாவது ஹனிமூனுக்கு நயன்தாராவிற்கு இவ்வளவு தான் செலவானதா..? ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் ஏழு வருட காதலுக்கு பின்னர் கடந்த ஜூன் மாதம் தான்  பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.கடும் கட்டுப்பாடுகளுடன்  நடந்த திருமண விழாவில் பல  முன்னணி சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

திருமணம் முடிந்தபிறகு நயன் - விக்கி இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றனர்.அத்தோடு  நயன்தாரா ஷாருக்கின் ஜவான் படத்தில் நடிக்க இருந்ததால் இருவரும் வேகமாக இந்தியா திரும்பி விட்டனர் என்று கூறப்பட்டது.



நயன்தாரா ஜவான் ஷூட்டிங் சென்ற நிலையில், விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் விழா ஏற்பாடுகளை செய்தார். அதற்கு பின்னர் இருவரும் தற்போது இரண்டாவது ஹனிமூனுக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று இருக்கின்றனர்.

மேலும் இந்த இரண்டாவது ஹனிமூனில் எடுக்கும் புகைப்படங்களை  விக்னேஷ் சிவன் தொடர்ந்து இன்ஸ்டாவில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.



இந்நிலையில் இந்த இரண்டாம் ஹனிமூன் செலவையும் நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் விக்கி - நயன் இருவரும் ஒரு பைசா செலவில்லாமல் ஹனிமூன் சென்றிருக்கிறார்கள்.


ஏற்கனவே அவர்கள் திருமண செலவையும் நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்க விடயம் 


Advertisement

Advertisement