காஞ்சனா 3 திரைப்படத்திற்கு பின்னர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் 4 வருடங்களுக்கு பின்னர் வெளியாகப்போகும் திரைப்படம் ருத்ரன்.
கதிரேசன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர், பூர்ணிமா, சரத்குமார், நாசர் என பலர் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது.
எனினும் தற்போது இப்படத்திற்காக ராகவா லாரன்ஸ் ரூ. 15 கோடி வரை சம்பளம் பெறுவதாகவும், பிரியா பவானி ஷங்கர் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகின்றது.
சரத்குமார் ரூ. 1 கோடி, பூர்ணிமா ரூ. 35 லட்சம், நாசர் ரூ. 50 லட்சம், சச்சு ரூ. 20 லட்சம் என பிரபலங்கள் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
Listen News!